Tuesday, 19 July 2011
2000வது டெஸ்ட்
இன்றைக்கு கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போட்டி, ஜீலை 21ம் தேதி தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் போட்டிதான். சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2000வது டெஸ்ட் என்ற சிறப்பு ஒரு புறம் இருக்க, முன்னாள், இந்நாள் வீரர்கள் ஊடகங்களில் கொடுத்துக் கொண்டிருக்கும் பேட்டிகள் ஒரு புறம் பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. போதாக் குறைக்கு சச்சின் தனது நூறாவது சர்வதேச சதத்தை, இதுவரை ஒருமுறைக்கூட சதம் அடிக்காத புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் அடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு வேறு இதயத்துடிப்பை டரியலாக்கிக் கொண்டிருக்கிறது. பொறுத்திருந்துப் பார்ப்போம் ஜெயிக்கப் போவது கிரிக்கெட்டை உலகுக்கு அறிமுகப் படுத்திய இங்கிலாந்தா? இல்லை கிரிக்கெட்டை அங்கீகரிக்கபடாத மதமாக கொண்டாடும் இந்தியாவா? என்று.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment